தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல் வகுப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ள காலப்பகுதியில் ஒன்லைன் முறையில் கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வகுப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ள காலப்பகுதியில் ஒன்லைன் வகுப்புக்களை, கருத்தரங்குகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றிய முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள் கருத்தரங்குகள் மற்றும் ஏனைய கற்பித்தல் எதிர்வுகூறல் நடவடிக்கைககள் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளன.