கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கினிகத்தேன தேசிய பாடசாலையின் இரண்டு வகுப்பு மாணவர்களும் பல ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
எட்டு மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர்களின் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலை முழுவதும் கிருமிநாசினி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
அறிகுறிகளுடன் காணப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று 63 ஆசிரியர்களே பாடசாலைக்கு வந்துள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஒன்லைன் கற்றலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாடசாலையின் சுகாதாரப் பாதுகாப்பு முறை நெறிப்படுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய சுமார் 500 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கினிகத்ஹேன தேசிய பாடசாலையில் சுமார் 2100 மாணவர்கள் கல்வி பயிலும் அதேவேளை 100 ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.