மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்கு ஒரு வகுப்புகு்கு மூன்று புத்தகங்கள் மாத்திரம் வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக தெரிவித்துள்ளார்.
இதன்படி 2021 ஆம் ஆண்டு முதல் தரம் 6 – 11 வரையான வகுப்புகளுக்கு ஒரு வருடத்திற்கு மூன்று நூல்கள் மாத்திரமே வழங்கவும் ஒரு நூலில் தவணைக்குரிய அனைத்து பாடங்களுக்குமான பாடங்களை உள்ளடகக்வும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பிள்ளைகளின் புத்தகப் பையின் பாரம் பெருமளவு குறைவடைவதோடு பாடநூல் அச்சிடல் மற்றும் வினியோகம் ஆகியவற்றுக்கான செலவுகளையும் குறைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.