சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவு செய்யப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றம் மாணவர்களின் விண்ணப்பங்களில் 90% ஆனவை தற்போது பூர்த்தி் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.
வருடாந்தம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக சுமார் மூன்றரை இலட்சம் ஆள் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக வியானி குணதிலக்க சுட்டிக்காட்டினார்.
ஆட்பதிவு திணைக்களத்தின் கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (05) அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை (08) முதல் வழமைக்குத் திரும்புமென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் சேவையினூடாக நாளாந்தம் சுமார் 1,500 பேர் வரை சேவையை பெறுவது குறிப்பிடத்தக்கது.