தரம் ஒன்று மாணவர் அனுமதி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உபகுழு குறித்த அறிக்கையை கல்வி மற்றும் மனித வள விருத்தி தொடர்பான ஆய்வு உப குழுவின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஆஷு மாரசிங்கவினால் பாராளுமன்றிற்கு நேற்று (27) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த பாடசாலைகளை வழங்குவது மற்றும் இதன் போது அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தை மேலும் வளப்படுத்தும் ஆய்வு அறிக்கை இது. இதற்காக 23 பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதன் போது 21 முக்கியமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 18 ஆலோசனைகளுக்கு குழுவின் உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர் என ஆஷு மாறசிங்க தெரிவித்தார்.