அதிபர் சேவை தரம் 111 க்கான போட்டிப் பரீட்சை நடைபெற்று நான்கு மாதங்களுக்கும் அதிக காலம் கடந்து விட்டபோதிலும் இன்னமும் பெறுபேறு வெளியிடப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டடுள்ளது.
கல்வி அமைச்சு கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அதிபர் தரம் 111 க்கான பரீட்சையை நடாத்தியது. இப்பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வெற்றிடம் நிலவும் சுமார் இரண்டாயிரம் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.
பரீட்சை ஒன்று நடைபெற்று இரண்டு மாதங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படுவதை வழக்கமாகக் கொண்டிருப்பினும், நான்கு மாதங்கள் கடந்தும் இப்பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை என பரீட்சைக்குத் தோற்றியவர்கள் அங்கலாய்க்கின்றனர்.
இரண்டாயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற பரீட்சையில் பெறுபேறு இன்னமும் வெளியிடப்படாமையினால் பாடசாலைகளில் காணப்படும் சுமார் 2000 வெற்றிடங்களால் பாடசாலைக் கட்டமைப்பு பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும் பரீட்சைப் பெறுபேறுகளை விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.