.
கடந்த உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான வெட்டுப் புள்ளி இன்னும் இரு மாதங்களில் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
அதன் தலைவர் கலாநிதி பீ.எஸ்.எம். குணரத்ன இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் சுமார் 70000 பேர் விண்ணப்பித்துள்ள போதிலும் 31000 பேருக்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புக் காரணங்களினால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டமையினால் மாணவர் உள்ளீர்ப்பு செயன்முறை சிக்கலுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் கலந்துரையாடி விரைவில் இது குறித்து தீர்வு காணவுள்ளதாகவும் அவர் தெரவித்தார்.