பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெறுகின்றன. மாணவர்களதும், ஆசிரியர்களதும் வருகை உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக பாடசாலையின் அதிபர்கள் தெரிவிதுள்ளனர்.