காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை யில் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைக்கானவிண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இதே போன்று அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்குமான விண்ணப்பங்களும் பொறுப்பேற்கப்படும்.
அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் அடிப்படையில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் ஒரு நாள் சேவையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அவசியம் திணைக்களத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்பொழுது நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட்டுள்ள 331 கிளை அலுவலகங்கள் மூலம் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகள், அதிபர் அல்லது பிரிவெனாக்களை சேர்ந்த தலைமை அதிகாரிகள் மூலமும் தோட்ட அதிகாரிகள் மூலமும் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
அனைத்து கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலமும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். சம்பந்தப்பட்ட தகவல் ஆலோசனை திணைக்களத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் கட்டளைகள் தொடர்பிலான உறுதி செய்யும் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.