பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தாமதமாகி கடந்த திங்கள் ஆரம்பமாகிய அரச பாடசாலைகளுக்கு தென்னிலங்கையில் மாணவர்கள் வரவு மிகக் குறைவாகக் காணப்பட்ட போதிலும் வடக்கு மாகாணத்தில் மாணவர் வரவு 70 வீதமாகக் காணப்பட்டதாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் திரு எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப இரு தினங்கள் குறைவான மாணவர்களே சமூகம் தந்ததாகவும் இன்று 70 வீதமான வரவு பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள அதேவேளை, வடக்கு மாகாணத்தில் பெற்றாரின் ஒத்துழைப்பு உயர்ந்ததாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
வவுனியா, மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பாடசாலைகள் இன்று வழமைக்குத் திரும்பிவிட்டதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அவருக்கு அதந்த விவரம் இதுவர கிடைக்கவில்லையாம். குத்துமதிப்பாக செய்தி போடுவது இதுதானா