ஆசிரியர்களின் ஒன்றிணைந்த தொழில் சங்கங்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு பிற்போடப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இப்போராட்டத்தை மே மாதம் 9,10 ஆகிய திகதிகளில் நாடுமுழுவதும் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
இப்போராட்டத்திற்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு தொழில்சார் பிரச்சினைகளை முன்வைத்து இப்போராட்டங்கள் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.