தேசிய கல்வி நிறுவகத்தின் அனைத்து செயலமர்வுகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இதன்படி செயலமர்வுகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு வார இறுதிகளில் நடைபெற இருந்த பாடநெறி விரிவுரைகளும் ரத்துச் செய்யப்பட்டு்ளளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெளியார் தேசிய கல்வி நிறுவகத்தின் விடுதிகளில் தங்குவதும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.