இராவணா -1 சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்தை நேற்று மாலை 6.30 மணியளவில் சென்றடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் விண்வெளி தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப்பட்ட முதலாவது செய்மதி என்ற பெருமையைப் பெறும் இராவணா -1 செயற்கைக் கோள் நேற்று முன்னைய தினம் வேர்ஜினியாவில் உள்ள விண்வெளி ஏவு தளத்தில் இருந்து அதிகாலை 2.15 மணியளவில் விண்ணிற்கு ஏவப்பட்டது.
1.1 கிலோகிராம் எடை கொண்ட இது ஜப்பானின் க்யுஷு இன்ஸிடிடியுட் நிலையத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தரிந்து தயாரத்ன மற்றும் துலனி சாமிகா ஆகிய இரு பொறியியலாளர்கள் இணைந்து தயாரித்துள்ள இராவணா -1 செயற்கைக் கோள் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையத்தின் ஊடாக அண்மையில் அமரிக்காவின் நாசாவிற்கு கையளிக்கப்பட்டு அங்கிருந்து ஏவப்பட்டுள்ளது.
இராவணா – 1ன் தயாரிப்பாளர்களான பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியில் பீட பட்டதாரியான தரிந்து தயாரத்ன மற்றும் தாய்லாந்து ஆசியா தொழிநுட்ப நிலையத்தின் பட்டதாரியான துலானி ஆகியோர் ஜப்பானின்ன க்யுஷு விண்வெளி ஆய்வு நிலையத்தில் விண்வெளி ஆய்வு தொடர்பான பொறியியல் பாடநெறியைத் தொடர்ந்து கொண்டுள்ளனர்.
இராவணா -1 மூலம் இலங்கை மற்றும் இலங்கைக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களை புகைப்படம் எடுக்கும் வகையில் பூமியைச் சுற்றி 5 முறை பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.