இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் தயாரிக்கப்ட்ட இராவணா 1 செயற்கைக் கோள் இன்று 18 ஆம்திகதி வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.15 மணியளவில், நாசாவின் வேர்ஜினியாவிலுள்ள மத்திய அட்லாண்டிக் நிலையத்தில் இருந்து இது ஏவப்பட்டுள்ளது.
இச்செயற்கைக் கோள் நாளை மாலை 6.30 மணியளவில் சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்தை அண்மிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
1.1 கிலோகிராம் எடை கொண்ட இது ஜப்பானின் க்யுஷு இன்ஸிடிடியுட் நிலையத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தரிந்து தயாரத்ன மற்றும் துலனி சாமிகா ஆகிய இரு பொறியியலாளர்கள் இணைந்து தயாரித்துள்ள இராவணா -1 செயற்கைக் கோள் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையத்தின் ஊடாக அண்மையில் அமரிக்காவின் நாசாவிற்கு கையளிக்கப்பட்டது.
இராவணா – 1ன் தயாரிப்பாளர்களான பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியில் பீட பட்டதாரியான தரிந்து தயாரத்ன மற்றும் தாய்லாந்து ஆசியா தொழிநுட்ப நிலையத்தின் பட்டதாரியான துலானி ஆகியோர் ஜப்பானின்ன க்யுஷு விண்வெளி ஆய்வு நிலையத்தில் விண்வெளி ஆய்வு தொடர்பான பொறியியல் பாடநெறியைத் தொடர்ந்து கொண்டுள்ளனர்.
இராவணா -1 மூலம் இலங்கை மற்றும் இலங்கைக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களை புகைப்படம் எடுக்கும் வகையில் பூமியைச் சுற்றி 5 முறை பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னஸ் – 1 எனும் செய்மதி ஏவியினூடாக விண்ணிற்கு ஏவப்பட்டுள்ள இராவணா – 1 தற்போது வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.
அது தொடர்பான காணொளி கீழே தரப்பட்டுள்ளது.