தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் வாண்மை விருத்தித் துறையின் பாடநெறிகளுக்கான வெளிவாரி விரிவுரையாளர்களை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை விளங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 17 ஆம் திகதி தேசிய கல்வி நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நேற்று பட்டப் பின் பாடநெறிகளுக்கான விரிவுரையாளர்கள் தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இன்றைய தினம் கல்வி மாணி முதலான பாடநெறிகளுக்கான வெளிவாரி விரிவுரையாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜயந்தி குணசேகர, ஆசிரியர் கல்வித்துறை பிரதிப் பணிப்பாளர் நாயகம் மற்றும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறியின் இணைப்பாளர் ஷிபான் சாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.