மகாபொல கொடுப்பனவு இம்மாதம் முதல் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளதாக மகாபொல நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.
மகாபொல கொடுப்பனவு மாணவர்களின் கணக்கிற்கு நேரடியாக வழங்குவதற்கான சுற்றுநிருபம் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மகாபொல கொடுப்பனவு தாமதமாக மாணவர்களுக்கு கிடைப்பதை தவிர்க்கும் முகமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மாதத்திற்கான கொடுப்பனவு மே மாதம் 15 ம் திகதியளவில் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.