இலங்கையில் நோய்த் தாக்கங்கள் காரணமாக மரணமடைவோரின் எண்ணிக்கையில் புற்றுநோய் மூலம் மரணமடைவோரின் எண்ணிக்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையின் புற்றுநோய் தொற்றா நோயாக உள்ளது. அதன் பரம்பலும், தாக்கமும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. 2001ஆம் ஆண்டில் காணப்பட்ட புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையை விட 2018இல் புற்றுநோயால் 2018ஆம் ஆண்டில் பத்து சதவீதமாக அதிகரித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் நாட்டில் 2,000க்கு மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
ஆண்களை விட அண்மைக் காலங்களில் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் போக்கு அதிகரித்தது காணப்படுவதாகவும் கூடுதலான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலகளாவிய ரீதியில் 18 மில்லியனுக்கு மேற்பட்டோர் புற்றுநோயால் 2018 ஆம் ஆண்டில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மேலும் அறிவித்துள்ளது.