அரச நிறுவனங்கள் திணைக்களங்களில் அரசியல் ரீதியான பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவிற்கு சுமார் 32000 கோரிக்கை மனுக்கள் கிடைத்துள்ளதாக நீர்ப்பாசன, நீர்வள மற்றும் அனர்த்த முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரித்தார்.
இதில் ஆகக் கூடிய மனுக்கள் இலங்கை போக்குவரத்துச் சபையிலிருந்து கிடைத்துள்ளது. அதன் எண்ணிக்கை 3001 ஆகும். இதில் 1660 மனுக்கள் விசாரணை குழுவின் முன் ஆஜர் ஆகவில்லை என்பதோடு 1340 பேர் ஆஜராகியுள்ளனர். அவர்களில் 689 பேர் அரசியல் ரீதியாக பழிவாங்கல்களுக்கு உட்பட்டுள்ளனர் என்பதை விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இலங்கை மின்சார சபையிலிருந்து 231 மனுக்களும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து 249 மனுக்களும் இலங்கை துறைமுக அதிகார சபையிலிருந்து 181 மனுக்களும் தபால் திணைக்களத்திலிருந்து 90 மனுக்களும் புகையிரத திணைக்களத்திலிருந்து 110 மனுக்களும் அரசியல் ரீதியான பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளன.
ஊழியர்களுக்கு சொத்து இழப்பு, உடல் காயங்கள் ஏற்பட்டிருப்பின் அவர்களுக்கான நஷ்டஈட்டை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.