கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் தோற்ற வுள்ள மாணவர்கள் அனைவரும் ஆளடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையார் நாயகம் வியானி குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பரீட்சை காலம் நெருங்கிய பின்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது பல்வேறு சிரமங்கள் எதிர் நோக்கப்படுகின்றன.
அவ்வாறே மாணவர்களது விண்ணப்பங்கள் உரிய வழிகாட்டல்களின் அடிப்படையில் நிரப்பப் படுவதில்லை. எனவே அவற்றை வினியோகிக்க நாம் அதிக சிமரங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே தான் இம்முறை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைத்தால் உரிய காலத்தில் ஆளடையாள அட்டைகளை வினியோகிப்பதற்கு போதிக கால அவகாசம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.