பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலை இளமாணி வெளிவாரி புதிய பாடத்திட்டத்தின் 200 மட்டத்திற்கான பதிவுகள் முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோரப்பட்ட விண்ணப்பத்தின் படி 19. மார்ச் 2019 என்றிருந்த முடிவுத் திகதி 12.ஏப்ரல் 2019 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னைய அறிவிப்பு
200 வது மட்டத்திற்கான பதிவுகள் கலை இளமாணி (வெளிவாரி – புதிய பாடத்திட்டம்)
2015 – 2016 மாணவக் குழு
தொடர் தொலைக்கல்வி நிலையம் (CDCE), 2015 மற்றும் 2016 ஆண்டு மாணவக் குழுவிற்கான கலை இளமாணி (வெளிவாரி புதிய பாடத்திட்ட) 200 வது மட்டப் பரீட்சைகளை 2019 நவம்பர் மாதம் நடாத்த தீர்மானித்துள்ளது. 2018 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 100 வது மட்ட பரீட்சை பெறுபேறுகள் வெகு விரைவில் வெளியிடப்படும். 100 வது மட்ட பரீட்சையில் குறைந்தது C- சித்தியை மூன்று அடிப்படை கற்கைநெறி அலகுகளிலும் பெற்றுக்கொண்ட பரீட்சார்த்திகள் பட்டப்படிப்பின் 200 வது மட்டத்திற்கு பதிவுசெய்வதற்கு தகுதியுடையவர்கள். மாணவர்கள் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 200 வது மட்டத்திற்கான பிரதான கற்கைநெறி அலகுகள் மற்றும் இணைப்பட கற்கைநெறி அலகுகளை மட்டுமே தெரிவு செய்தல் வேண்டும். மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இணைப்பாடங்களின் தெரிவுகள் பற்றிய விபரங்கள் எதிர்வரும் காலங்களில் தொடர் தொலைக்கல்வி நிலைய உத்தியோகபூர்வ இணையதளத்தின் மூலம் அறிவிக்கப்படும். பதிவின் பின்னர் நீங்கள் இணைப்படங்களை மட்டும் மாற்ற விரும்பின், CDCE இனால் புதிய இணைப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் இணைப்பாடங்களை மாற்றலாம். 200 வது மட்டத்திற்கு தகுதியான மாணவர்கள், பதிவினை மேற்கொள்வதற்கு, பணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டின் மூலப்பிரதியுடன் (Original Payment slip) விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து 12-04-2019 ஆம் திகதிக்கு முன்னர் தொடர் தொலைக்கல்வி நிலையத்திற்கு (CDCE) அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர். பதிவிற்கான விண்ணப்பத்தை இங்கே பதிவிறக்கம் (download) செய்யலாம்.