ஆசிரியர் சேவையிலிருந்து பாடசாலை அதிபர்களாக பதவி உயர்வு பெற்ற 486 பேர், மீண்டும் ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கு கல்வி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.
ஆசிரியர் சேவையில் அவர்கள் ஏற்கனவே பெற்றுவந்த சம்பளத்தை விடவும், அதிபர் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளும் ஒருரின் ஆரம்ப சம்பளம் குறைவாக இருப்பதே இதற்கான காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களுள் அதிபர் சேவையில் தெரிவு செய்யப்பட்டு, வெளிநாட்டுக்கு மேலதிக பயிற்சிக்காக சென்றவர்களும் காணப்படுவதாக இலங்கை அதிபர் சங்கத்தின் செயலாளர் பியசிறி பிரணாந்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளிநாடுகளில் பயிற்சி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் சேவைக்கு செல்ல விரும்புவதாயின் அவர்கள் வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்காக செலவிடப்பட்ட பணம் அவர்களிடமிருந்து அறவிடப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வெளிநாட்டுப் பயிற்சிக்கான கட்டணத்தைச் செலுத்தியாவது ஆசிரியர் சேவைக்கு வருவதற்கு புதிய அதிபர்கள் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது