தரம் 1 – 5 வரை ஆங்கில மொழியில் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைக்குத் தயாராவதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆரம்ப வகுப்புகள் தமிழ் அல்லது சிங்களத்திலும் தரம் 6 முதல் படிப்படியாக ஆங்கிலத்திலும் கற்பித்தலை மேற்கொள்ளும் ஒழுங்கையே கல்விக் கொள்கை கொண்டுள்ளது. இருப்பினும் தற்போது தரம் 1- 5 வரை ஆங்கில மொழியில் கற்றல் நடைபெறுகின்றது.
தமிழ் சிங்கள மொழிகளைப் புறக்கணித்து ஆங்கிலத்தை ஆரம்ப வகுப்பு மொழியாக அனுமதித்தமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்வது பற்றி தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிவருவதாகவும் அவர் தெரித்தார்.
அரச நிதியுதவி பெறும் தனியார் பாடாசலைகளையும் அவற்றின் கிளைகளையும் உருவாக்கும் கல்வி அமைச்சின் திட்டத்திற்கும் தமது எதிர்ப்பை அவர் வெளியிட்டார்.