தரம் 1 முதல் 5 வரை ஆரம்பக் கல்வியை ஆங்கில மொழியில் வழங்கும் நடைமுறையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என அதுரலியே ரத்தன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று பாராளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
ஏனைய நாடுகளைப் போல் தாய் மொழியில் ஆரம்பக் கல்வி அமைய வேண்டும் என்ற கொள்கையை இலங்கை தற்போது பின்பற்றவில்லை. எந்தக் குழந்தைக்கு தனது தாய் மொழியில் ஆரம்பக் கல்வி இல்லையோ அது அந்நாட்டின் குழந்தையாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
சர்வதேசப் பாடசாலைகளை தரப்படுத்துவதற்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும ்அவர் வேண்டிக் கொண்டார்.