மொரட்டுவைக்கு பல்கலைக்கழத்திற்கான புதிய வைத்திய பீடமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இடம் பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரவுப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். அவ்வாறே ருஹுணு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திற்கான 12 மாடி கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
மேலும் சில பல்கலைக்கழகங்களுக்கும் புதிய வைத்திய பீடங்களை உள்வாங்க உத்தேசித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் வைத்திய பீடத்திற்கான பிரவேசத்தை 300 மாணவர்களால் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.