கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் ஆசிரியர் ஆலோசகர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக பாடசாலைக் கல்வி சீர்குலைய வில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அனுர குமார திசானாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஆசிரியர் ஆலோசகர் பதவிக்கு உள்ளீர்க்கப்பட்டமை மற்றும் நியமிக்கப்பட்டமை என்பன உரிய ஒழுங்கு முறையிலன்றி அரசியல் நோக்கத்தில் மேற்கொள்ள்பபட்டுள்ளன. எனவே தற்போது அவர்களுக்காக சம்பளத் திட்டமொன்றைப் பிரேரித்து சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் பிரேரனையை ஆசிரியர் ஆலோசகர்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஆசிரியர் ஆலோசகர் சேவையை ஸ்தாபிப்பது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி செப்படம்பர் மாதம் அமைச்சரவைக்குச் சமர்பித்தோம். எனினும் அது அனுமதிக்கப்படவில்லை. எனினும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.