ஆசிரியர்கள்- அதிபர்கள் தொழில் சங்கங்களின் ஒருங்கிணைப்பில் இடம் பெறும் வரலாற்றில் மிக முக்கியமான போராட்டம் இன்று இடம் பெறஉள்ளது.
இதற்கிடையில் கடந்த திங்கள் ஆரம்பமான ஜிட் முன்னோடிப் பரீட்சையும் இன்று இடம் பெறவுள்ளது. இது குறித்து ஆசியர் சேவை சங்கம், பரீட்சை ஆணையாளரிம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இன்று ஆசிரியர் – அதிபர் தொழில்சங்க நடவடிக்கைகள் இடம் பெறுவதால் தற்போது நடைபெறும் ஜிட் பரீட்சை தொடர்பாக அவதானம் செலுத்தி மாற்று வழிகளைக் கையாளுமாறு ஆசிரியர் சேவை சங்கம் கோரியுள்ளது.
இதற்கிடையில் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அச்சமின்றி விடுமுறையை அறிவிக்குமாறு தொழில ்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் தொழில் சங்கங்கள் அதனை பொறுப்பேற்பதாகவும் அவை அறிவித்துள்ளன.