நேற்று முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஒரு அம்சமாக எனது எதிர்காலம் எனும் கடன் திட்டம் பிரேரிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த தர உயர் தரத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்கள் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்காக கடன் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் விஸ்தரிக்கும் நோக்குடன் எனது எதிர்காலம் எனும் திட்டத்தைப் பிரேரித்துள்ளது.
எனினும் இலங்கை ஆசிரியர் சங்கம் இது தொடர்பான எதிர்ப்பை இன்று வெளியிட்டுள்ளது.
இது இலவசக் கல்வியை பலவீனப்படுத்துவதோடு அரசாங்கம் அரச பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள வேண்டிய கடமைகளில் இருந்து பின்வாங்குகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்களில் அரச கடன்களில் படிப்பதற்கான திட்டத்திற்குப் பதிலாக அரச பல்கலைக்கழகங்களில் மேலும் அதிகமான மாணவர்கள் கற்கும் விதத்திலான திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் அது மாற்று யோசனையை முன்வைத்துள்ளது.