சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி கல்வி அமைச்சினால் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் 01ஆம் திகதி செயற்படும் படியாக கல்வி அமைச்சு இதற்கான கடிதத்தினை வழங்கியுள்ளது.
நீண்டகாலக் கோரிகையின் பேரில், பல்வேறு தரப்பினரின் உதவியுடன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிலும், சம்மாந்துறை கல்வி வலயத்திலும் இரண்டாவது தேசிய பாடசாலையாக சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி தரமுயர்த்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் மத்மசிறி ஜெயமான ஒப்பமிட்டு உத்தியோகபூர்வ தரமுயர்த்தல் கடிதத்தினை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறை முன்னாள் அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி, சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இதற்கான நிகழ்வில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (01) அதிபர் யூ.எல்.லாபீரிடம் வைபவ ரீதியாக வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.