தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் புதிய கல்வியாண்டில் 31,600 மாணவர்களை அனுமதிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டின் க. பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளுக்கமைய 1,77,907 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர்களில் 76,596 பேர் மாத்திரமு அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது வழமையை விட பல்கலைக்கழக அனுமதி கோருவோரின் எண்ணிக்கை இவ்வருடம் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.