பாடசாலையினுள் மாணவி ஒருவருக்கு பல்வேறு தடவைகள் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட அதிபர் ஒருவரை குளியாப்பிட்டிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
தரம் 12 கற்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரை பல்வேறு தடவைகள் பாடசாலையினுள் வைத்தே துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குளியாப்பிட்டி பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டடத்தின் மாடிப் படிகள் அமைந்துள்ள மறைவான பிரதேசங்களில் வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு விடுத்ததாக குறித்த மாணவி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளமையை அடுத்து பாடசாலைக்கு வருகை தந்த சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் குறித்த அதிபரை கைது செய்துள்ளதாக அறிய வருகின்றது.
நேற்று கைது செய்யப்பட்ட அதிபர் இன்று நிதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.