ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறிஞர் பேராசிரியர் ஜமால் சனாட் அல்சுவைட் 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்.
‘The Mirage’என்ற நூலே நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் ஷைக் ஸைட் பரிசு உட்பட அறபு மற்றும் சர்வதேச ரீதியாக பல்வேறு பரிசுகளை தட்டிச் சென்றுள்ள நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
அறபு மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூல் இஸ்லாமிய அரசியலின் வரலாறு, ஆரம்பம், வியாபகம், அதன் நோக்கம் முதலான விடயங்கள் உள்ளடங்கியுள்ளது.
பெல்ஜியம், இதாலி, பிரான்ஸ், ஜேர்மன், ஸ்பைன், சுவீடன் முதலான நாடுகளின் அறிஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அரசியல் வாதகள் உட்பட சுமார் 50 க்கும் அதிகமானோர் இந்நூலை நோபல் பரிசுக்காக சிபாரிசு செய்துள்ளனர்.