தரம் ஒன்றில் கல்வியை ஆரம்பித்துள்ள மாணவர்களுக்கு முதலாம் தவணை முடிவடைய முன்னர் சீருடை வவுச்சர்களை பகிர்ந்தளிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி 17 ஆம் திகதி மாணவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டாலும் கூட முறையீடு மற்றும் இதர காரணங்களால் பாடசாலைக்குச் சேர்க்கப்பட்ட மாணவர்களின் இறுதி எண்ணிக்கை தொடர்பாக ஒன்றரை மாதங்கள் வரும் வரை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமையினால் முதலாம் தவணைக்குள் இவற்றை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் தொழில் சங்கங்கள் தரம் ஒன்று மாணவர்களுக்கு சீருடை வவுச்சர்கள் இன்னமும் வழங்கப்படவில்லை என கடந்த வாரம் தொழில்சங்கங்கள் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.