பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களின் கிளைகளை மாலைதீவில் ஆரம்பிப்பதற்கு மாலைதீவின் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதன் முதலாக இலங்கையின் பல்கலைக்கழகத்தின் கிளை வெளிநாடொன்றில் அமைக்கப்படவுள்ளதாக அண்மையில் கண்டி யஹலதென்ன முஸ்லிம் வித்தியாலயத்தின் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றி அமைச்சர் ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
முதல் இரண்டு வருடங்களையும் மாலைதீவில் கற்றுவிட்டு மீதி இரு வருடங்களையும் இலங்கையில் கற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக மாலைதீவின் தனியான தீவொன்றை ஒதுக்கித் தருவதற்கு அந்நாட்டின் ஜனாதிபதி இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.