தேசிய பாடசாலைகளில் தரம் ஒன்று அனுமதி தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், தேசிய பாடசாலைகளில் தரம் ஒன்று அனுமதி தொடர்பாக கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
அதற்கேற்ப கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த ப்ரேமதிலக தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அக்குழு தேசிய பாடசாலைகளில் தரம் ஒன்று அனுமதி தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுளை ஆராய்ந்து உரிய தீர்வுகளை எட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.