2018/2019 கல்வியாண்டிற்கான தகவல் முறைமைகள் விஞ்ஞான இளமாணிப் பட்ட நிகழ்ச்சித்திட்டத்திற்கு விண்ணப்பதாரிகளின் தெரிவூக்கான உளச்சார்புப் பரீட்சை
2018ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு தோற்றிய மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட “இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இளமாணிப் பட்டக் கற்கை நெறிகளுக்கான அனுமதி – கல்வியாண்டு 20182019”
என்ற கைநூலின் பிரிவூ 1.2 மற்றும் பிரிவூ 2.2.8.27 ஆகியவற்றின் கீழ் குறிப்பிடப்பட்டவாறு பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமைகளைக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரிகளிடமிருந்து உளச்சார்புப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றன.
மேற்படி கற்கை நிகழ்ச்சித் திட்டத்திற்கு தெரிவூ செய்யப்பட தகைமை பெறுவதற்கு உளச்சார்புப் பரீட்சையில் சித்தியடைவது ஒரு முன்-தேவையாகும். ஆகையால், மேற்படி கற்கை
நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பரிசீலிக்கப்படுவதற்கு தமது விருப்பத் தெரிவூகளைக் குறிப்பிட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு 20182019 கல்வியாண்டு அனுமதிக்கு
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரிகள் கொழும்புப் பல்கலைக்கழக கணினிக் கல்லூரியினால் நடத்தப்படவிருக்கும் உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பித்து, தோற்றுமாறு
வேண்டப்படுகின்றனர்.
உளச்சார்புப் பரீட்சை ஆங்கில மொழி மூலம் மட்டுமே நடாத்தப்படும் என்பதனை தயவு செய்து கவனிக்கவும்.
முக்கியமான திகதிகள்
விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி : 15.02.2019
உளச்சார்புப் பரீட்சைத் திகதி : 08.04.2019 (திங்கட்கிழமை) (கொழும்பில் மட்டும் நடாத்தப்படும்)