பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிரப்பு ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுதந்திர சதுக்கம் முதல் அரச சேவை ஆணைக்குழு வரை எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று அரச சேவைகள் ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெறும்.
காலை 10 மணி முதல் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2009 ன் பின்னர் அதிபர் சேவைக்கு நியமிக்கப்பட்ட 4000 பேரினதும் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள தமிழ் மொழி சித்தி தொடர்பாக தமக்கு சலுகை வழங்குவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த சலுகையை வழங்குவதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கனேசனும் அரச பரிபாலன மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரான ரஞ்சித் மத்தும பண்டாரவும் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடாமையினால் சுமார் 4000 அதிபர்கள் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுக் கொள்வது தாமதமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.