அரச ஊழியர்களின் செயற்பாடுகுள் தொடர்பாக மத்திய மாகாண ஆளுனர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அரச ஊழியர்கள் அலுவலகங்களில் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு
போனில் டுக் டுக் என்று மெசேஜ் வருகிறது. போனை எடுத்து பார்க்கிறார்கள். பின்னர் பேஸ் புக் செல்கிறார்கள். இப்போது நீங்கள் யோசித்துப் பாருங்கள். அரச ஊழியர்கள் சரியாக எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்கிறார்கள் என்று.வேலை செய்பவர் உயிரை கொடுத்து வேலை செய்கிறார். வேலை செய்யாதவர் தொடர்ந்தும் ஐஸ் தான்.
யாரேனும் அதிகாரி ஒருவர் வேலை செய்ய வேண்டிய நேரத்திற்குள் முகநூலைப் பாவித்து அது தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் வந்தால்…. அவர்களை சேவையில் இருந்து நிறுத்தி விட்டுத்தான்……ஒழுங்க விசாரணை மேற்கொள்வேன். மக்கள் சேவை உரிய வகையில் கிடைக்க வேண்டும்’
என்றார்.
கடந்த வாரம் மத்திய மாகாண ஆளுனர் கண்டி நகரின் பிரதான இடங்களில் சட்ட விரோதமாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றிய போதும் அரச ஊழியர்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.