பாடசாலைகளில் பணம் வசூலிப்பது தொடர்பான சுற்று நிருபத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் உத்தவரவு வழங்கியுள்ளார்.
26/2018 சுற்றுநிருபம் தொடர்பாக வௌியாகிய குற்றச்சாட்டுக்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் பின்னர் இச்சுற்று நிருபம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் ஆசிரியர் மற்றும் மாணவர் சங்கங்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன. குறித்த சுற்று நிருபம் பாடசாலையில் பணம் அறவிடுவதை சட்டபூர்வமான செயற்பாடாக மாற்றுகிறது என்று அவை குற்றம் சாட்டியிருந்தன.
இந்நிலையிலேயே கல்வி அமைச்சின் செயலாளருக்கு உடனடியாக இச்சுற்று நிருபத்தை ரத்துச ்செய்யுமாறு கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த சுற்றுநிருபம் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளரின் ஒப்பத்தோடு வௌியானது.
பாடசாலைகளில் பணம் அறவிடுவதை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு இது அமுல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினாலும் கல்வி அமைச்சின் கண்காணிப்பின்றி முறையற்ற விதத்தில் பணம் வசூலிப்பதற்கான இடம்பாடுகள் அதிகம் காணப்படுவதாக கண்டறியப்பட்டதை அடுத்து கல்வி அமைச்சர் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் விருப்பத்திற்கேற்ப பணம் அறவிடுவதற்கு சந்தரப்பம் வழங்கியுள்ளமை இலவசக் கல்வி மீது பாரிய தாக்கம் செலுத்தும் செயற்பாடாகவும் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் மீது பொருளாதார ரீதியான சுமையை அதிகரிக்கிறது. எனவே இவை தொடர்பாக கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கேற்ப 26/2018 சுற்று நிருபம் இன்று முதல் ரத்துச் செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக முன்பு அமுலில் இருந்த 5/2015
பாடசாலைகளில் முறையற்ற விதத்தில் பணம் அறவிடுதல் தொடர்பான சுற்று நிருபம் அமுலில் இருக்கும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
26/2018 சுற்று நிருபத்தைப் பார்வையிட
Useful
Use ful