2018/2019 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ள பாடசாலை பரீட்சார்த்திகள் குறித்த பாடசாலையிலிருந்து பெற்றுக் கொள்ளும் பெறுபேறுகளை முன்வைத்தல் போதுமானது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித அவர்கள் வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.
பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கு பாடசாலைகள் வழங்கும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பேறுபேறுகள் போதுமானவை என அவர் அதில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக விண்ணப்பத்திற்காக அதிகளவான விண்ணப்பதாரிகள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு பெறுபேறு பெற்றுக் கொள்ள முயற்சித்து வருகின்றனர். எனினும் அவ்வாறு பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தாது என்பது கவனத்துக்குரியது.