கல்வி அமைச்சின் 2018/26 சுற்று நிருபம் பாடசாலையைக் கடையாக்கி பெற்றாரிடம் பணம் அறவிடுவதை சட்டமாக்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலவசக் கல்விக்கான மாணவர் மக்கள் ஒன்றிம் நாடுமுழுவதும் ஒட்டியுள்ள சுவரொட்டிகளில் இக்குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த சுற்றுநிருபத்தை உடனடியாக சுருட்டிக் கொள்ளும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாடசாலைகள் பெற்றாரிடம் பணம் அறவிடுவதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து கல்வி அமைச்சு., அவ்வாறான சம்பங்கள் தொடர்பாக தமது அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு அறிவித்திருந்தது.
எனினும் அவ்வாறு பணம் அறவிடுவதை சட்டபூர்வமாக்கும் சுற்றுநிருபம் கடந்த வருடம் வெளியிடப்பட்டுள்ளதாக இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சுற்றுநிருபம் 2019.01.01 முதல் பாடசாலைகளில் நடைபெறும் அனைத்து நிதிச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. இதன் படி இதற்கு முன்னர் காணப்பட்ட அனைத்து நிதி செயற்பாடுகளுக்குமான ஒழுங்குமுறைகள் நீக்கப்பட்டுள்ளன.
பல பாடசாலைகளில் தற்போது நிதி அறவிடும் செயற்பாடுகள் குறித்த சுற்றுநிருபத்தை அடிப்படையாகக் கொண்டே இடம் பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018/26 சுற்றுநிருபத்தை பார்க்க பின்வரும் இணைப்பைப் பயன்படுத்துங்கள்.