மூடப்படும் அபாயத்தை எதிர் நோக்கும் பாடசாலைகளைப் பாதுகாக்க அரசாங்கத்திடம் வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது அத்தியவசிய தேவையாக இல்லாத தனியார் பாடசாலைகளை கண்காணித்தல் முதலான நடவடிக்கைகளுக்கு அதிக கவனம் வழங்கும் அரசாங்கம் இவ்வாறான விடயங்களை புறக்கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
10162 மொத்தப் பாடசாலைகளில் சுமார்3000 பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளது.
தரம் ஒன்றுக்கு எந்தவித விண்ணப்பமும் வராத பாடசாலைகள் 350 காணப்படும் அதேவேளை விண்ணப்பம் 1 வந்த பாடசாலைகளின் எண்ணிக்கை 140 ஆகும்.
இரண்டு விண்ணப்பங்கள் மாத்திரம் கிடைக்கப் பெற்ற பாடசாலைகளின் எண்ணிக்கை 160 ஆகும். மூன்று விண்ணப்பங்கள் 210 பாடசாலைகளுக்கும் நான்கு விண்ணப்பங்கள் 250 பாடசாலைகளுக்கும் கிடைக்கப் பெற்றுள்ள அதேவேளை ஐந்து விண்ணப்பங்கள் மாத்திரம் கிடைக்கப் பெற்ற பாடசாலைகளின் எண்ணிக்கை 230 ஆகும்.
தரம் ஒன்றுக்கு 10 -15 மாணவர்கள் சேர்ந்துள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1403 ஆகும்.
பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கையின்படி
1-15 மாணவர்கள் உள்ள பாடசாலைகள் 250
16-30 கொண்ட பாடசாலைகள் 522
31-50 கொண்ட பாடசாலைகள் 683
51-75 கொண்ட பாடசாலைகள் 845
76-100 கொண்ட பாடசாலைகள் 698
101-125 கொண்ட பாடசாலைகள் 656
காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரு பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இரு பாடசாலைக ளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்தது. இதன் காரணமாகவே இந்நிலமை தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மேல், வடமத்தி, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் இந்நிலமை தீவிரம் பெற்றுள்ளமையை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.