கல்வித்துறையின் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள டியுசன் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தாம் தயாராகி வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலி சங்கமித்தா வித்தியாலயத்தில் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
டியுசன் பெற்றாருக்கு பெருந் தொந்தரவாக மாறியுள்ளது. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தரம், உயர் தரம் முதலானவற்றில் பாடத்திட்டத்திற்குள் பரீட்சை நடாத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.
டியுசனில் கற்பிக்கப்படுவபற்றுக்கு மாற்றமாக பரீட்சை வினாத்தாளை எடுப்பதற்கு நாம் முயற்சிக்கிறோம்.
இதன் பிறகு டியுசன் சென்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைய முடியாது. ஒவ்வொரு வருடத்திற்கும் மாற்றி மாற்றி வினாத்தாள் எடுக்கும் திட்டம் குறித்து முடிவெடுத்துள்ளோம். பெற்றோருக்கு பிள்ளைகளில் டியுசன் கட்டணத்தை சுமக்க முடியவில்லை. குளிரூட்டப்பட்ட ஒரு வகுப்பறையில் கற்பிக்க 5000 அறவிடுகிறார்கள். மூன்று பாடங்களுக்கு 15000 அறவிடுகிறார்கள். இது அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு தீர்வை விரைவில் காண்போம் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.