சுரக்ஷா மாணவர்களுக்கான காப்புறுதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
சுரக்ஷா காப்புறுதிக்கு விண்ணப்பித்த பல மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை தொடர்பாக பல்வேறு பிரதேசங்களில் இருந்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பாக ஆராய்ந்து பார்த்த போது காப்புறுதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தாம் அறிந்து கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் 26 ஆம் திகதி பதவி ஏற்ற மகிந்த தலைமையிலான அரசு சுரக்ஷா வை நிறுத்தியுள்ளது.
நாம் மீண்டும் சுரக்ஷாவை ஆரம்பிக்க உள்ளோம். புதிய சேவை வழங்குனர்வுடன் ஒப்பந்தம் ஒன்று மேற்கொண்டு தற்போதைய கொடுப்பனவுகளை விட அதிக கொடுப்பனவுகளை மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம் என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.