பல்வேறு பாடசாலைத் தேவைகளுக்கென பெற்றோரிடம் பணம் சேகரிப்பதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சர் வேண்டியுள்ளார்.
பெற்றோரிடம் பணம் அறவிடுவது தொடர்பாக இதற்கு முன்னர் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள சுற்றுநிருபத்தின் அடிப்படையில் செயற்படுவது அனைத்து அதிகாரிகளினதும் கடமையாகம் என அவர் நினைவூட்டியுள்ளார்.
அவ்வாறே தேசிய பாடசாலைகளில் இவ்வாறான பண அறிவீடுகள் மோசடிகள் தொடர்பாக ஏதேனும் இடம ்பெற்றால் அவற்றை முறைப்பாட்டு அதிகாரியாக பதிதாக நியமிக்கப்பட்டுள்ளவரிடம் தெரியப்படுத்தலாம் என அவர் மேலும் கூறினார்.
கே.ஜே.சி. மகேஷிகா, உதவிக் கல்விப் பணிப்பாளர், தேசிய பாடசாலைகள் பிரிவு, கல்வி அமைச்சு, பத்தரமுல்ல எனும் முகவரிக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.