தேசிய பரீ்டசைகளின் போது விடைத் தாள் மீள் திருத்தம் வெறுமனே புள்ளிகளை மீள் கணக்கீட்டுக்கு உட்படத்தும் முறையை விட்டுவிட்டு முழு விடைத்தாளையும் மறுபரிசீலணைக்கு உட்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பரீட்சைகள் திணைக்களத்தை வேண்டியுள்ளது
புள்ளிகளை மாத்திரம் மறு பரிசீலனை செய்வது மாத்திரம் போதுமானதல்ல. மாறாக முழு விடைத்தாளையும் மறு பரீசீலனைக்கு உட்படுத்தும் தேவை எழுந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விசாகா வித்தியால மாணவி ஒருவரின் ஆங்கில விடைப்பத்திர மீள் திருத்தம் தொடர்பான வழக்கின் போது விடைப்பத்திரத்தின் கட்டுரைப்பகுதிக்கு புள்ளிகள் வழங்கப்படாமை தெரியவந்துள்ளது. ஒரு புள்ளியை கட்டுரைப் பகுதிக்கு வழங்கி இருந்தால் கூட மாணவியின் புள்ளிகள் 72 ஆக அதிகரிக்கும். குறித்த வருடத்தில் 72 புள்ளிகளே ஏ பெறுபேற்றுக்கான எல்லையாக காணப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.