உலகம் முழுவதும் 10 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களில் 20 வீதமானோர் உளநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே நேரம் 15 முதல் 19 வரையான வயதுப்பிரிவினரில் மரணமடைவதற்கான காரணங்களில் மூன்றாவது செல்வாக்கு மிக்க காரணம் தற்கொலையாகும் என்றும் இதற்கு உளநலம் பாதிக்கப்பட்டமையே காரணம் என்றும் அவ்வறிக்கை மேலும் விளக்கியுள்ளது.
இந்த வயதுப்பிரிவினரின் நோய்களால் பீடிக்கப்பட்டவர்களில் 16 வீதமானோர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 14 வயதிலேயே இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகுகின்றதாகவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
முன்கூட்டியே உளநலப் பாதிப்பை அறிந்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளாமையின் காரணமாக உளநலப் பாதிப்பு தீவிரமடைந்து வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.
இலங்கையில் 13 வயது தொடக்கம் 17 வயது வரையான பிள்ளைகளில் 39 வீதமானோர் உடல் உள பிரச்சினைகளை எதிர் கொள்வதாகவும் அதில் ஆண் பிள்ளைகள் 50 வீதமானோர் இந்தப் பிரச்சினைகளை எதிர் கொள்வதகாகவும் சுகாதார அமைச்சின் உளநலம்ப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி த சில்வா தெரிவத்துள்ளார்.