இலங்கை உயர்தொழிநுட்பவியல் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 1500 ரூபா உதவித் தொகையை 2500 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இந்த உதவித் தொகையை சுமார் ஆறாயிரம் மாணவர்கள் தற்பொழுது பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாத்தாண்டியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.