இன்று நாடுமுழுவதும் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
உத்தியோகபூர்வ அரச நிகழ்வு கல்வி அமைச்சர் தலைமையில் கிரியுல்லயில் நடைபெற்றது.
இதே நேரம் பாடசாலை கிடைக்காது 33 மாணவர்கள் நடுத்தெருவில் வரவேற்கப்பட்ட நிகழ்வு வீரகெடியவில் இடம்பெற்றுள்ளது.
வீரகெடிய ராஜபக்க்ஷ ஆரம்ப வித்தியாலயத்தில் 33 மாணவர்களை சேர்த்துக் கொள்ளாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பெற்றோர் தமது பிள்ளைகளை நடுத்தெருவில் வரவேற்பு நடத்தி அதன் பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தங்கல்ல – விரகெடிய பாதையில் இவர்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று பாடசாலை செல்ல ஆயத்தமாகி வருகை தந்த மாணவர்களின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாக மாறியுள்ளன.
மிக அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலையில் தமது பிள்ளைகளுக்கு இடம் கிடைக்க வில்லை என பெற்றார் குற்றம் சாட்டியுள்ளனர்.