இவ்வருடம் ஆயிரம் ஆசிரியர்கள் உளவளத்துணையாளர்களாக நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று குருணாகல் நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த அவர், ஆயிரம் ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்படும் என்றார்.
மாணவர்கள் சில நேரங்களில ்அவர்களது உறவினர்கள், பெற்றோர் நண்பர்களால் கூட துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பல மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை தேவையாக உள்ளது. எனவே இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.