இலங்கையின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 14 ஆம் திகதி விசேட விடுமுறை அறிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 14 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நேற்று அறிவிக்கப்பட்டது.
13 ம் திகதி ஞாயிறு தினமாகவும் தைப் பொங்கல் தினமான 15 ஆம் திகதி செவ்வாய்கிழமையாகவும் வருவதனால் – இந்நிலையை விசேட காரணமாக கருத்தில்கொண்டு – எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை -இலங்கையின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் – கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் விடுத்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
இவ்வேண்டுகோளை கல்வியமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பாக கல்வி அமைச்சின் சார்பாக எவ்வித அறிவித்தலும் இன்னமும் வௌியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.